துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பதவிகளில், 85 இடங்களுக்கான, 'குரூப் - 1' தேர்வு, பிப்., 19ல் நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக அரசுத்துறையில், 29 துணை கலெக்டர்கள், 39 முதல் நிலை, டி.எஸ்.பி.,க்கள், எட்டு வணிக வரித்துறை உதவி கமிஷனர்கள், ஒரு மாவட்ட பதிவாளர், ஐந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் எட்டு மாவட்டங்களில், தீயணைப்பு அதிகாரி என, குரூப் - 1 பதவிகளில், 85 காலியிடங்களுக்கு, பிப்., 19ல், முதல் நிலை தேர்வு நடக்கிறது. இத்தேர்வுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், ஆன்லைன் பதிவு துவங்கியுள்ளது; டிச., 12ல் முடிகிறது. விண்ணப்ப கட்டணத்தை, கிரடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம், ஆன்லைன் வங்கி கணக்கு மூலமும் செலுத்தலாம்.
கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாளில், அதிகம் பேர் விண்ணப்பிக்கும் போது, ஆன்லைனில், தொழில்நுட்ப பிரச்னைகள் எழலாம். இதனால், விண்ணப்பங்களை கடைசி நாளில், சமர்ப்பிக்க முடியாமல் போனால், அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது.
இதற்கான தகுதி உட்பட, மேலும் விபரங்களை, 044 - 2533 2855, 2533 2833 மற்றும் 1800 425 1002 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment