Saturday, December 6, 2014

அறிவியல் உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அறிவியல் உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு
தடய அறிவியல் சார்நிலைப் பணியில் அடங்கிய அறிவியல் உதவியாளர் நிலை2 பதவியில் 33 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு ஜூன் 2ம் தேதியும், நேர்காணல் செப்டம்பர் 18, 19ம் தேதியும் நடந்தது.இந்த தேர்வுகளில் பெற்ற மொத்த மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட தேர்வு பட்டியல் தேர்வாணைய இணையதளம் மற்றும் தேர்வாணைய அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

TNPSC GROUP IV NOTIFICATION |இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 5 ஆயிரம் பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 5 ஆயிரம் பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க நவம்பர் 12-ந் தேதி கடைசி நாள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4-ல் அடங்கிய கீழ்க்காணும் பதவிகளுக்கு அறிவிக்கை வெளியாகிறது.

பதவிகள்: இளநிலை உதவியாளர் பிணையம் (39); இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2133); தட்டச்சர் (1683); சுருக்கெழுத்து தட்டச்சர் (331); வரித் தண்டலர் (22); வரைவாளர் (53) மற்றும் நில அளவர் (702). மொத்தத்தில் காலிப்பணியிடங்கள் 4 ஆயிரத்து 963.

கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும்.

குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க நவம்பர் 12-ந் தேதி கடைசி நாள்.

கட்டணம் செலுத்த நவம்பர் 14-ந் தேதி கடைசி நாள்.

தேர்வு டிசம்பர் 21-ந் தேதி காலை நடைபெற உள்ளது.

தேர்வு மையங்களின் எண்ணிக்கை: 244 (மாவட்ட தலைமையிடங்கள் மற்றும் தாலுகாக்கள்)

விண்ணப்பிக்கும் முறை: தேர்வாணைய இணையதளத்தில் இணையவழி விண்ணப்பம் மூலம் மட்டுமே.

ஏற்கனவே நிரந்தர பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, இப்பதவிகளுக்குரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

நிரந்தர பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

நிரந்தர பதிவில் பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தில் இருந்து மட்டுமே விலக்களிக்கப்படுகின்றனர்.

ஏற்கனவே, அவர்கள் வகுப்பிற்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.

நிரந்தர பதிவு செய்திருத்தல் மட்டுமே இப்பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது.

விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணங்களை இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்துச் சீட்டு மூலம், விண்ணப்பித்த இரண்டு நாட்களுக்குள் செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.

இதுகுறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002-ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் உதவி ஆணையர் பணிக்கு வருகிற 27-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், மறுநாள் (28-ம் தேதி) நேர்முகத் தேர்வும் நடைபெற உள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் உதவி ஆணையர் பதவியில் 4 காலியிடங்களை நிரப்ப கடந்த மார்ச் 8, 9-ம் தேதிகளில் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 415 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவு கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்
தேர்வுக்கு 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வருகிற 27-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், மறுநாள் (28-ம் தேதி) நேர்முகத் தேர்வும் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்புக்கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார்.