Saturday, December 6, 2014

அறிவியல் உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அறிவியல் உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு
தடய அறிவியல் சார்நிலைப் பணியில் அடங்கிய அறிவியல் உதவியாளர் நிலை2 பதவியில் 33 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு ஜூன் 2ம் தேதியும், நேர்காணல் செப்டம்பர் 18, 19ம் தேதியும் நடந்தது.இந்த தேர்வுகளில் பெற்ற மொத்த மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட தேர்வு பட்டியல் தேர்வாணைய இணையதளம் மற்றும் தேர்வாணைய அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

TNPSC GROUP IV NOTIFICATION |இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 5 ஆயிரம் பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 5 ஆயிரம் பணியிடங்களுக்கு குரூப்-4 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க நவம்பர் 12-ந் தேதி கடைசி நாள்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி 4-ல் அடங்கிய கீழ்க்காணும் பதவிகளுக்கு அறிவிக்கை வெளியாகிறது.

பதவிகள்: இளநிலை உதவியாளர் பிணையம் (39); இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) (2133); தட்டச்சர் (1683); சுருக்கெழுத்து தட்டச்சர் (331); வரித் தண்டலர் (22); வரைவாளர் (53) மற்றும் நில அளவர் (702). மொத்தத்தில் காலிப்பணியிடங்கள் 4 ஆயிரத்து 963.

கல்வி தகுதி எஸ்.எஸ்.எல்.சி. ஆகும்.

குறைந்தபட்ச வயது 18 ஆக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க நவம்பர் 12-ந் தேதி கடைசி நாள்.

கட்டணம் செலுத்த நவம்பர் 14-ந் தேதி கடைசி நாள்.

தேர்வு டிசம்பர் 21-ந் தேதி காலை நடைபெற உள்ளது.

தேர்வு மையங்களின் எண்ணிக்கை: 244 (மாவட்ட தலைமையிடங்கள் மற்றும் தாலுகாக்கள்)

விண்ணப்பிக்கும் முறை: தேர்வாணைய இணையதளத்தில் இணையவழி விண்ணப்பம் மூலம் மட்டுமே.

ஏற்கனவே நிரந்தர பதிவில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் அவர்களுடைய பதிவு எண் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை உள்ளீடு செய்து, இப்பதவிகளுக்குரிய இதர விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

நிரந்தர பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் நேரடியாக முழு விவரங்களையும் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

நிரந்தர பதிவில் பதிவு செய்தவர்கள் விண்ணப்ப கட்டணத்தில் இருந்து மட்டுமே விலக்களிக்கப்படுகின்றனர்.

ஏற்கனவே, அவர்கள் வகுப்பிற்கு வழங்கப்பட்ட சலுகைகளின் அடிப்படையில் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.

நிரந்தர பதிவு செய்திருத்தல் மட்டுமே இப்பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது.

விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணங்களை இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் அஞ்சலகங்களில் செலுத்துச் சீட்டு மூலம், விண்ணப்பித்த இரண்டு நாட்களுக்குள் செலுத்திவிட வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம்.

இதுகுறித்த சந்தேகங்களை 044-25332855, 044-25332833 மற்றும் கட்டணமில்லாத் தொலைபேசி எண் 1800 425 1002-ல் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் உதவி ஆணையர் பணிக்கு வருகிற 27-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், மறுநாள் (28-ம் தேதி) நேர்முகத் தேர்வும் நடைபெற உள்ளது.

தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையில் உதவி ஆணையர் பதவியில் 4 காலியிடங்களை நிரப்ப கடந்த மார்ச் 8, 9-ம் தேதிகளில் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 415 பேர் தேர்வெழுதினர். தேர்வு முடிவு கடந்த 14-ம் தேதி வெளியிடப்பட்டது. அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்
தேர்வுக்கு 12 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வருகிற 27-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், மறுநாள் (28-ம் தேதி) நேர்முகத் தேர்வும் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்புக்கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்துள்ளார்.

Tuesday, October 21, 2014

TNPSC : 5,000 அரசு பணிக்கு இதுவரை விண்ணப்பித்தோர் 3 லட்சம்: 12 லட்சம் பேர் போட்டி போடுவர் என எதிர்பார்ப்பு
தமிழக அரசின் பல துறைகளில் காலியாக உள்ள, 4,963 குரூப் 4 நிலையிலான வேலைக்கு, கடும் போட்டி எழுந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) அறிவிப்பு வெளியிட்ட ஒரு வாரத்தில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். இறுதியாக, 12 லட்சம் பேர், மனு தாக்கல் செய்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இளநிலை உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர் உட்பட, 4,963 இடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை, கடந்த 14ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. அன்றைய தேதியில் இருந்தே, www.tnpsc.gov.inஎன்ற இணையதளம் வழியாக, போட்டி போட்டுக்கொண்டு, விண்ணப்பித்து வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில், பதிவு செய்தோர் எண்ணிக்கை, 3 லட்சத்தை தாண்டியதாக, துறை வட்டாரம் தெரிவிக்கிறது. விண்ணப்பிக்க, நவ., 12ம் தேதி கடைசி நாள். அதற்குள், மேலும், 9 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.போட்டித் தேர்வு, டிச., 21ம் தேதி நடக்கிறது. 10ம் வகுப்பு கல்வித்தகுதி நிலையில் நடத்தப்படும் தேர்வு என்பதால், ஒவ்வொரு முறையும், அதிகமானோர் விண்ணப்பிக்கின்றனர். சராசரியாக, 12 லட்சம் பேர் விண்ணப்பிக்கின்றனர். தேர்வில், 8 லட்சம் முதல், 9 லட்சம் பேர் வரை பங்கேற்கின்றனர். இந்த முறையும், மொத்தமாக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, 11 லட்சத்தை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, July 21, 2014

TNPSC: பள்ளிக் கல்வித் துறையில் 1,395 இளநிலை உதவியாளர்களுக்கு ஜூலை 25, 26-ல் பணி நியமன கலந்தாய்வு
பள்ளிக் கல்வித் துறையில் 1,395 இளநிலை உதவியாளர்களுக்கு ஜூலை 25, 26 தேதிகளில் ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது.இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
2013-14 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1,395 பேர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெற உள்ளது. பணி நாடுநர்கள் தங்களது முகவரியில் குறிப்பிட்டுள்ள மாவட்டத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலக கலந்தாய்வு மையத்தில் பங்கேற்க வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 25-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தக் கலந்தாய்வில் சொந்த மாவட்டஙகளில் போதிய காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களுக்கும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்களுக்கும் ஜூலை 26-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
இதில் பங்கேற்கும் பணி நாடுநர்கள் கலந்தாய்வு மையத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே வர வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட துறை ஒதுக்கீட்டு ஆணை, கல்விச் சான்றுகள், ஜாதி சான்று மற்றும் இதர ஆவணங்களை தவறாமல் கொண்டு வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Wednesday, June 25, 2014

2,846 காலி பணியிடங்களை நிரப்ப29ம் தேதி குரூப் 2 போட்டி தேர்வு சென்னை:தமிழக அரசின், பல துறைகளில், குரூப் 2 நிலையில் காலியாக உள்ள, 2,846 இடங்களை நிரப்ப, வரும், 29ம் தேதி போட்டி தேர்வு நடக்கிறது.தகுதியான தேர்வர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், நேற்று, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு: வரும், 29ம் தேதி காலை, 'குரூப் 2ஏ' (நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்கள்) தேர்வு நடக்கிறது. 2,846 பணியிடங்களை நிரப்ப, இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதை, 6.25 லட்சம் பேர் எழுத உள்ளனர். தகுதிவாய்ந்த தேர்வர்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தில், ( www.tnpsc.gov.in) ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர் பட்டியலும், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. 'ஹால் டிக்கெட்' கிடைக்காத விண்ணப்பதாரர், நிராகரிப்பு பட்டியலில், தங்களின் பெயர் உள்ளதா என பார்க்க வேண்டும்.உரிய தகுதியுடன், சரியான முறையில் விண்ணப்பித்து, உரிய தேர்வு கட்டணத்தை செலுத்தியும், 'ஹால் டிக்கெட்' கிடைக்கவில்லை எனில், contacttnpsc@ gmail.com என்ற, இமெயிலுக்கு, உரிய விவரங்களுடன் தெரிவிக்கலாம்.இவ்வாறு, ஷோபனா தெரிவித்துள்ளார். தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில், 943 பேரின் விண்ணப்பங்கள், அதிக வயது உள்ளிட்ட, பல காரணங்களால், நிராகரிக்கப்பட்டுள்ளன.
TNPSC
www.tnpsc.gov.in
In the year 1923, the British Government established a Public Service Commission to examine the salary structure of the Indian Civil Service.

Wednesday, May 7, 2014

நெட்', டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் ஒரே நாளில் நடப்பதால், 'எந்த தேர்வை எழுதுவது' என, பட்டதாரிகள் குழப்பத்தில் தவிப்பு

நெட்', டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் ஒரே நாளில் நடப்பதால், 'எந்த தேர்வை எழுதுவது' என, பட்டதாரிகள் குழப்பத்தில் தவிக்கின்றனர்.

கல்லூரி விரிவுரையாளர்களுக்கான, மத்திய அரசின், தேசிய தகுதித்தேர்வு ('நெட்'-நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட்) ஜூலை 29ல் நடக்கிறது. அன்று, தமிழக அரசின் 'குரூப் 2' தேர்வும் நடக்கிறது. இரண்டு தேர்வுகளுக்கும், தமிழகத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்து உள்ளனர். ஆனால், எதில் பங்கேற்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, தேனியை சேர்ந்த அசோகன் கூறுகையில், ''நாங்கள் 50 பட்டதாரிகள் இணைந்து, தேனி ரயில்வே ஸ்டேஷனில் அமர்ந்து, போட்டி தேர்வுக்கு படித்து வருகிறோம். இரண்டு தேர்விலும் பங்கேற்க வேண்டும், என்பது எங்கள் விருப்பம். ஆனால், மத்திய அரசின் தேர்வு நாடு முழுவதும் நடப்பதால், தேதியை மாற்ற வாய்ப்பு இல்லை. 'குரூப் 2' தேர்வு தேதியை, தமிழக அரசு மாற்றி அமைத்தால், பட்டதாரிகள் பயனடைவர்,'' என்றார்

Monday, April 28, 2014

Head quarters of UN Agencies &Other Organisations
1.Food and Agricultural Organisation (FAO) —Rome
2. International Labour Organisation (ILO) —Geneva
3. World Health Organisation (WHO) —Geneva
4. World meteorological Organisation (WMO) —Geneva
5. International Telecommunication Union (ITD) —Geneva
6. International Monetary Fund (IMF) —Washington D.C.
7. International Finance Corporation (IFC) —Washington D.C.
8. International Bank For Reconstruction and Development (IBRD) or World Bank —Washington
9. International Civil Aviation Organisation (ICAO) —Montreal (data byhttp://goo.gl/8a2rgq)
10. United Nations Educational Scientific and Cultural Organization (UNESCO) —Paris
11. United Nations International Children's Emergency Fund (UNICEF) —New York
12. Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) —London
13. International Atomic Energy Agency (IAEA) —Vienna(data by http://goo.gl/8a2rgq)
14. United Nations Industrial Development Organizations (UNIDO) —Vienna, (Austria)
15. United Nations Fund for Population Activities (UNFPA) —New York
16. United Nations Development Programme (UNDP) —New York(data byhttp://goo.gl/8a2rgq)
17. United Nations High Commissioner for Refugees (UNHCR) —Geneva (Switzerland)
18. United Nations Environment Programme (UNEP) —Nairobi (Kenya)
19. Universal Postal Union (UPU) —Berne (Switzerland)
Like ·  · 

Wednesday, April 23, 2014

TNPSC TNPSC QUESTION AND ANSWERS


TNPSC VAO GK QUESTION AND ANSWERS PART 1 TO 19
·                     TNPSC Exam Model OMR Sheet (to practice ourquestions)
·                      
·                     General Knowledge (GK) and Current Affairs New – (Uploaded in Aug, 2012)
·                      
·                     CENSUS of INDIA – 2011 – Provisional Details
·                      
·                     TNPSC Group-2 (CSSE-I) Model Test – 4 Q&A’s
·                      
·                     TNPSC Group-2 (CSSE-I) Model Test – 3 Q&A’s
·                      
·                     TNPSC Group -2 (2009) General Knowledge Q&A’s
·                      
·                     TNPSC Science Part-1 Q&A’s
·                      
·                     TNPSC VAO Exam (20-02-2011) GK+ GT Keys
·                      
·                     TNPSC VAO Exam (20-02-2011) GE Keys
·                      
·                     TNPSC Exam Model Test – 2 Q&A’s (Full) GK+GT
·                      
·                     TNPSC Exam Model Test – 1 Q&A’s (Full) GK+GT
·                      
·                     TNPSC Group-2 Original Q&A’s (2007) GK+GT
·                      
·                     Tamil Authors and Books Part-1
·                      
·                     TNPSC Group-1 (2007) Original Q&A’s
·                      
·                     Important Days
·                      2011 நிகழ்வுகள் 
·                     —————————————
·                     TNPSC Exam Model OMR Sheet (to practice our questions)
·                     General Knowledge (GK) and Current Affairs
·                     CENSUS of INDIA – 2011 – Provisional Details
·                     TNPSC Group-2 (CSSE-I) Model Test – 4 Q&A’s
·                     TNPSC Group-2 (CSSE-I) Model Test – 3 Q&A’s
·                     TNPSC Group -2 (2009) General Knowledge Q&A’s
·                     TNPSC Science Part-1 Q&A’s
·                     TNPSC VAO Exam (20-02-2011) GK+ GT Keys
·                     TNPSC VAO Exam (20-02-2011) GE Keys
·                     TNPSC Exam Model Test – 2 Q&A’s (Full) GK+GT
·                     TNPSC Exam Model Test – 1 Q&A’s (Full) GK+GT
·                     TNPSC Group-2 Original Q&A’s (2007) GK+GT
·                     Tamil Authors and Books Part-1
·                     10th – Physics
·                     8th – Physics + Chemistry
·                     6th – Physics Part-1
·                     6th - Physics Part-2
·                     6th – Social Science (Samacheer Kalvi)
·                     7th – Science (Samacheer Kalvi) 
·                     8th Biology (Samacheer Kalvi) New – (Uploaded in Sept, 2012)
·                     9th – Chemistry
·                     9th – Physics
·                     9th – History
·                     7th – Biology
·                     7th – Physics + Chemistry
·                     TNPSC Group-1 (2007) Original Q&A’s