Thursday, November 10, 2016

குரூப்-1 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

துணை கலெக்டர்கள் உள்ளிட்ட 85 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் புதிய குரூப்-1 தேர்வுக்கு நேற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்க டிசம்பர் 8-ந்தேதி கடைசி நாள்.
அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. அதன்படி இந்த வருட புதிய குரூப்-1 தேர்வு பற்றிய அறிவிப்பை இணையதளத்தில் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் துணை கலெக்டர் பதவிக்கு 29 பணியிடங்களும், துணை போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கு 34 பணியிடங்களும், வணிகவரித்துறை உதவி ஆணையர் பணிக்கு 8 பணியிடங்களும், மாவட்ட பதிவாளர் பதவிக்கு ஒரு பணியிடமும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பதவிக்கு 5 பணியிடமும், மாவட்ட தீயணைப்பு அலுவலர் பணிக்கு 8 பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்ததேர்வை எழுத விரும்புவோர் பட்டதாரிகளாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் 21 வயதை அடைந்திருக்க வேண்டும். அவர்கள் தேர்வாணைய இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரை காத்திராமல் அதற்கு முன்பாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க டிசம்பர் 8-ந்தேதி கடைசி நாள். முதலில் முதல்நிலை எழுத்து தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மெயின்தேர்வு நடத்தப்படும். அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் இறுதியாக தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் இடம் பெறுவார்கள்.
முதல் நிலை தேர்வு வருகிற 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி நடத்தப்படும். இதுதமிழ்நாடு முழுவதும் நடைபெறும். மெயின் தேர்வு சென்னையில் மட்டுமே நடக்கும்.
இந்த தகவலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது

No comments:

Post a Comment