Friday, November 3, 2017

தேர்வு முறைகளில் மாற்றம் – டி.என்.பி.எஸ்.சி

குரூப்-4 ,மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.
தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது.
இதன்படி தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனித்தனியாக கிரேடு வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது. இந்த வகையில், குரூப்-4 , விஏஓ ஆகிய பணியிடங்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த எழுத்து தேர்வை வரும் காலங்களில் ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் விரும்பும் பணியினை கலந்தாய்வு மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி, தனித்தனியாக தேர்வு நடத்துவதால் ஒவ்வொரு தேர்வுக்கும் ரூ.15 கோடி வரை செலவு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் விஏஓ தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களில் 60 சதவீதம் பேர் குரூப்-4க்கும் விண்ணப்பிக்கின்றனர் எனவும், 10-ம் வகுப்பு கல்வித் தகுதியில் பணியிடங்களை நிரப்புவதால், இரு தேர்வுகளும் இனி ஒன்றாகவே நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள டி.என்.பி.எஸ் இனி .சி.சி.எஸ்.இ – 4 (CCSE-IV) என்ற பெயரில் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment