Wednesday, August 17, 2016

போட்டி தேர்வுக்கு இலவச வகுப்புகள்

வேலைவாய்ப்பு தேர்வுகளில்ஏழை மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு கல்லுாரி மற்றும் பல்கலைகளில்இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்எனதொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபில் கூறினார்.

சட்டசபையில்அவர் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள்: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்க,பயிற்சி மற்றும் பாடங்கள் கற்பிக்க, 2 கோடி ரூபாயில்இணைய வழி கற்கும் முறை ஏற்படுத்தப்படும். மொழித்திறன்கணினித் திறன் மற்றும் மென்திறன் பயிற்சி வழங்குவதற்காக, 17 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், 5.18 கோடி ரூபாயில் ஆய்வகம் அமைக்கப்படும்.
மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில்இளைஞர்களின் திறன்களை மதிப்பீடு செய்ய, 1.92 கோடி ரூபாயில் திறன் மதிப்பீடு மற்றும் ஆய்வு மையம் அமைக்கப்படும்.
அமைப்புசாரா தொழிலாளர்கள்அவர்களது முன் அனுபவத்தின் மூலம் பெற்ற திறமையை அங்கீகரித்து,திறன் சான்றிதழ் வழங்கும் திட்டம், 10 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படும். அரசின் கட்டுமானப் பணிகளில்திறன் சான்றிதழ் பெற்ற தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்குஏழை மாணவர்களை தயார் செய்யும் விதத்தில், 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில்இலவச பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment