Saturday, January 21, 2017

குரூப் -1 தேர்வு முடிவு வெளியிட வலியுறுத்தல்

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.,) குரூப்-1 பணிகளுக்கான மெயின்தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் எனகோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த 2015ல் டி.என்.பி.எஸ்.சி.மூலம் குரூப்-1 பிரிவில் காலியாக உள்ள 79 பணியிடங்களை நிரப்ப முதல்நிலை தேர்வு நவம்பரில் நடந்தது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஆண்டு 2016 ஜூலை 29,30,31 ஆகிய நாட்களில் மெயின் தேர்வு நடத்தப்பட்டது.
இத்தேர்வு முடிந்து ஆறுமாதத்திற்கு மேலாகியும் இதற்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை. மத்திய அரசுபணியாளர் தேர்வாணையம் தேர்வினை நடத்தும் அந்த ஆண்டிலேயே பணிநியமனம் வழங்குகிறது. 
அதைப்போல டி.என்.பி.எஸ்.சி.,யும் விரைவாக தேர்வுமுடிவுகளை வெளியிட்டு காலிப்பணியிடங்களை நிரப்ப முன்வர வேண்டும் என ஆயக்குடி இலவச பயிற்சி மையம் இயக்குனர் ராமமூர்த்தி மற்றும் மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment