Tuesday, November 22, 2016

TNPSC GROUP I தேர்வு மொத்த காலிபணியிடங்கள் : 85. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.12.2016. தேர்வு நாள் : 19.02.2017

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு | தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி-I) தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளூக்கான அறிவிக்கையினை தேர்வாணையத்தின் இணையதளத்தில் 09.11.2016 அன்று வெளியிட்டுள்ளது
. மொத்த காலிபணியிடங்கள் : 85. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.12.2016. வங்கி மற்றும் அஞ்சலக செலுத்துச் : 10.12.2016 சீட்டின் மூலம் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள். தேர்வு நாள் : 19.02.2017 மு.ப
விண்ணப்பதாரர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல், அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்ப பிரச்சனைகளோ எழ வாய்ப்புள்ளது. விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் கவனமாக உள்ளீடு செய்யவும். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் சில விவரங்களை விண்ணப்பதாரர்கள் மாற்ற முடியாது. எனவே இணையவழி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் முன்னர் தாங்கள் அளித்துள்ள விவரங்கள் சரியானது தான் என்பதை உறுதி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விண்ணப்ப விவரங்களை மாற்ற கோரி பெறப்படும் கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (இஸ்லாமியர்), சீர்மரபினர், மிகவும். பிற்படுத்தப்பட்டவகுப்பினர், முன்னாள் இராணுவத்தினர் ஆகிய பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட மூன்று / இரண்டு முறை தேர்வுக் கட்டணச் சலுகையை ஏற்கனவே பயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும். உண்மையை மறைத்து தேர்வுக் கட்டணச் சலுகையை பயன்படுத்தி, தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் இருக்கும் விண்ணப்பதாரர்களின் மீது அறிவிக்கை மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் கூறப்பட்டுள்ளபடி நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கூறிய காரணங்களாலோ அல்லது வேறு காரணங்களாலோ விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை கடைசி கட்ட நாட்களில் சமர்ப்பிக்க இயலாது போனால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment