தமிழக அரசின், அரசுப்பணி தேர்வாணையம் டி.ன்.பி.எஸ்.சி., சார்பில், ஒருங்கிணைந்த குடிமைப்பணி தேர்வு-II (தொகுதி-II)ல் அடங்கிய பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 21 ஆகஸ்ட் 2016ம் தேதி அன்று நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குடிமைப்பணி தொகுதி-IIல் உள்ள 1094 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஏப்ரல் 30, 2015ம் தேதி அன்று டி.ன்.பி.எஸ்.சி., சார்பில் வெளியிடப்பட்டது. இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு 114 மையங்களில் ஜூலை 27, 2015 நடைபெற்றது.
இத்தேர்வுக்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 293 பேர் பங்குபெற்றனர். இதில், 12 ஆயிரத்து 337 விண்ணப்பதாரர்கள், முதன்மை எழுத்து தேர்வுக்கு தகுதிபெற்று, அவர்களுக்கான எழுத்து தேர்வு 8 மையங்களில் தேர்வு 21 ஆகஸ்ட் 2016ம் தேதி அன்று நடைபெற்றது.
No comments:
Post a Comment