Monday, March 28, 2016

போட்டி தேர்வுக்கு தயாராக அரசு பயிற்சி மையம் தேவை

அரசு பணி தேர்வு எழுவோருக்கு உதவும் வகையில்,திருப்பூரில் பயிற்சி மையம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி.குரூப் தேர்வுகள்ரயில்வேவங்கி பணிகள்வி.ஏ.ஓ.உள்ளிட்ட அரசு பணிகளுக்கு,தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுக்கு படிக்கும் மாணவமாணவியருக்குமாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகஅவ்வப்போது பயிற்சி தரப்படுகிறதுஇதற்கான அரங்கமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும்இத்திட்டத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட (பழைய கலெக்டர் அலுவலகம்) வளாகத்தில்சில மாதங்களாக மாணவமாணவியர்காலை முதல் மாலை வரை அமர்ந்து,படிக்கின்றனர். குடிநீர் பாட்டில்மதிய உணவுடன் வரும் அவர்கள்குரூப் ஸ்டடி செய்கின்றனர்;ஒருவருக்கு ஒருவர் தகவல்களை பரிமாறிக் கொண்டுசந்தேகங்களை தீர்த்துக் கொள்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில்இதற்கென போதிய வசதிகளுடன் தனியாக பயிற்சி மையம் ஏற்படுத்த வேண்டும்அவ்வப்போது பயிற்சி என்பதை மாற்றிமுழு அளவில் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அரசு பணி தேர்வுக்கான புத்தகங்கள்அப்டேட் தகவல்களை உடனுக்குடன் அறியகம்ப்யூட்டர் வசதியுடன் தனி மையம் ஏற்படுத்த வேண்டும். அனுபவமிக்க ஓய்வு பெற்ற பேராசிரியர்கள்அரசு அதிகாரிகள் மூலம் மாணவமாணவியருக்கு பயிற்சி தரவும் முன்வர வேண்டும்.
தனியார் பயிற்சி நிறுவனங்கள் இருந்தாலும்அதிக கட்டணம் என்பதால்ஏழை மற்றும் நடுத்தர மாணவ,மாணவியர் இம்மையங்களை நாடிச் செல்வதில்லை. எனவேமாவட்ட நிர்வாகம் தரப்பில்இதற்கான ஏற்பாடு செய்தால்பயனாக இருக்கும் எனஅவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments:

Post a Comment